ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண கல்வெட்டு திறப்பு விழா
சோளிங்கர் பகுதியில் நடந்த ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண கல்வெட்டு திறப்பு விழாவில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 இடங்களில், ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண நினைவு கொடுயேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு மாமுண்டூர் ஜம்பு குளம் கூட்ரோடு, பொன்னப்பந்தாங்கல் கூட்ரோடு பகுதிகளில் கொடி ஏற்றினார்.
அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த கோவிலில் மணி ஓசை எழுந்தவுடன் தனது பேச்சை நிறுத்தி, இரண்டு நிமிடங்கள் காத்திருந்து மீண்டும் பேச தொடங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முன்னிரத்தினம், மாவட்ட தலைவர் சி.பஞ்சாச்சரம், மாநில பொதுக் குழு உறுப்பினர் அக்ராவரம் பாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் கல்பனா மேகநாதன், எம்.அருண், சோளிங்கர் நகர தலைவர் டி.கோபால், ரகுராம்ராஜு, ஜெயவேலு, ஏ.எஸ்.ராஜா, காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தலைவர் எஸ்.பிரகாஷ், வடக்கு ஒன்றிய தலைவர் செல்வம், வி.சி.மோட்டூர் கணேசன், ஜி.எஸ்.நாகரத்தினம், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மற்றும் நரேஷ் உள்பட காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.