சமரச தீர்வு மையம் திறப்பு விழா


சமரச தீர்வு மையம் திறப்பு விழா
x

பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையம் திறப்பு விழா நடந்தது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக சமரச தீர்வு மையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மணி கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார். சார்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்யா, வக்கீல் சங்க தலைவர் மாஸ்கோ ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் வக்கீல் சங்க செயலாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர் சிவா, துணைச்செயலாளர் சுமதி, மூத்த வக்கீல் கோவிந்தராஜ், தேவகுமார், செல்வராஜ், மீடியேட்டர் கணேசன், சுபாஷினி, கனிமொழி, அறிவழகன், அரசு வக்கீல் சுப்பு ஆறுமுகம், நடேசன், கார்த்திகேயன், சுசித்ரா, ராஜ்குமார் ஆகியோர் பேசினர். நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக வக்கீல் சங்க பொருளாளர் அண்ணாதுரை வரவேற்றார். முடிவில் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற தலைமை எழுத்தர் சீனிவாசன் நன்றி கூறினார்.


Next Story