சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆன்மீக புத்தக நிலையம் திறப்பு


சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆன்மீக புத்தக நிலையம் திறப்பு
x

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆன்மீக புத்தக நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரம்,

பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

அவ்வாறு வருகின்ற பக்தர்களுக்கு கோவில் குறித்த ஸ்தல வரலாற்றினை தெரிந்து கொள்ளும் வகையில் திருக்கோவில் நிர்வாகம் கோவிலின் உள்ளே திருக்கோவில் நிதியிலிருந்துரூ. 3 லட்சம் செலவில் ஆன்மிக புத்தக நிலையம் ஒன்றே நிருவி உள்ளது. இந்த புத்தக நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்கியது.

கோயிலுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆன்மீக புத்தக நிலையத்தில் உள்ள புத்தகங்களை பார்வையிடுவதுடன் விருப்பதற்கேற்ப புத்தகங்களையும் வாங்கி செல்கின்றனர் அதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்துள்ளது.


Next Story