சில்லாகுளம் முத்துக்கருப்பன் நினைவு பள்ளியில் மாணவர் விடுதி திறப்புவிழா


சில்லாகுளம் முத்துக்கருப்பன் நினைவு பள்ளியில் மாணவர் விடுதி திறப்புவிழா
x

சில்லாகுளம் முத்துக்கருப்பன் நினைவு பள்ளியில் மாணவர் விடுதியை வெள்ளிக்கிழமை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே சில்லான்குளம் முத்துக்கருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று வருகை தந்தார். அவரை முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பாலமுருகன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அந்த பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவர்கள் விடுதியை அமைச்சர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அந்த விடுதியில் மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் விடுதி மாணவர்களுக்கு மதிய உணவை பரிமாறினார். இதனைத் தொடர்ந்து பசுவந்தனை ஆதிதிராவிட மாணவர் விடுதியை அமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பாலமுருகன் கருப்புசாமி, கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், முத்துக்கருப்பன் அறக்கட்டளை நிர்வாக கண்காணிப்பாளரும் பஞ்சாய்த்து தலைவருமான சரோஜா கருப்பசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், முத்துக்குமார், சண்முகையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story