புதிய பயணிகள் நிழலகம் திறப்பு விழா


புதிய பயணிகள் நிழலகம் திறப்பு விழா
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழியூர் ஊராட்சி அரசு பள்ளி அருகே புதிய பயணிகள் நிழலகம் திறப்பு விழா நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். இதில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ புதிய பயணிகள் நிழலகத்தை திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் சேகர், ஆழியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை முருகேசன், நாகை தாசில்தார் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், ரேவதி, ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சாக்ரடீஸ் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story