போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.12 கோடியே 7 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, கலெக்டர் வளர்மதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஆகியோர் அலுவலகத்தில் குத்து விளக்கேற்றினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விசுவேஸ்வரய்யா, குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ்கிரிஷ் அசோக், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, ரவிச்சந்திரன், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழக கண்காணிப்பு பொறியாளர் ஜெயகுமார், உதவி செயற் பொறியாளர்கள் ரகு, சிவகுமார், உதவி பொறியாளர் ஜெயகுமார், இளநிலை பொறியாளர் கோவிந்தசாமி, மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் முகமது அமீன், நவ்லாக் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.