திருமண மண்டபம் திறப்பு விழா


திருமண மண்டபம் திறப்பு விழா
x

கடையநல்லூரில் திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூரில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அச்சம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் எஸ்.எஸ்.கிராண்ட் திருமண மஹால் திறப்பு விழா நடந்தது. மகன் துபாய் சங்கரசுப்பு, மருமகள் சரோஜா, பேரன் லட்சுமண், பேத்தி கர்ஷினி ஆகியோர் முன்னிலையில் புதிய திருமண மண்டபத்தை பெற்றோர் லட்சுமணன்- சுப்புலட்சுமி திறந்து வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக அரசு ஒப்பந்ததாரர் அருணாச்சலம் செட்டியார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்தினார். விழாவில் கடையநல்லூர் நகரமன்ற உறுப்பினர் சுந்தர மகாலிங்கம், டாக்டர் சுப்பிரமணியன், பழனிச்சாமி, செல்வராஜ், யாத்ரா பழனி, மாவடிக்கால் காளிராஜ், கண்ணன் இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து திருமண மண்டப உரிமையாளர் துபாய் சங்கரசுப்பு கூறுகையில், ''தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 28 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் முற்றிலும் குளுகுளு வசதி மற்றும் லிப்ட் வசதியுடன் திருமண மண்டபம் அமைந்துள்ளது. தரைத்தளத்தில் ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலும், வெளிப்புறத்தில் 500 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலும் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் விசாலாமான பார்க்கிங் வசதி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் குளுகுளு வசதியுடன் 20 விடுதி அறைகளும் உள்ளது'' என்றார்.


Next Story