திருவள்ளுவர் சிலை திறப்பு விழா


திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
x

அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வி.ஜி.பி குழும தலைவரும், உலக தமிழ் சங்க தலைவருமான வி.ஜி.பி.சந்தோசம், அம்பை நகர்மன்ற தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன், அரிமா சங்க உறுப்பினர் கிருஷ்ண காந்தன், அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர், பிரம்மதேசம் பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ், சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன், தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பூதத்தான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்சியில் வேல்ஸ் வித்யாலயா மாணவர்களின் பல்வேறு திருக்குறள் மற்றும் தமிழ் மொழி குறித்த நடனம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் திருவள்ளுவர் வேடம் அணிந்த மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் ஜோஸ் இசையில் ஆசிரியை இசக்கியம்மாள் இயற்றிய வரியில் சினிமா பாடகர் வேல்முருகன் மற்றும் பள்ளி மாணவர்கள் பாடிய குறள் மொழி என்ற பாடலின் சி.டி. வெளியிடபட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வீரவேல் முருகன், இயக்குனர் ராஜராஜேஸ்வரி வீரவேல் முருகன், செயல் இயக்குனர் சிவராஜ் பாண்டியன் மற்றும் பள்ளி முதல்வர் சக்திவேல் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story