நவீன வசதிகளுடன் திருமகள் கார்டன் ஸ்மார்ட் சிட்டி திறப்பு விழா


நவீன வசதிகளுடன் திருமகள் கார்டன் ஸ்மார்ட் சிட்டி திறப்பு விழா
x

குடியாத்தம் நகரில் நவீன வசதிகளுடன் திருமகள் கார்டன் ஸ்மார்ட் சிட்டி திறப்பு விழா நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், அமலுவிஜயன் கலந்து கொண்டனர்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் நகரில் நவீன வசதிகளுடன் திருமகள் கார்டன் ஸ்மார்ட் சிட்டி திறப்பு விழா நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், அமலுவிஜயன் கலந்து கொண்டனர்.

திருமகள் கார்டன்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பஸ் நிலையத்தில் இருந்து 1½ கிலோ மீட்டர் தொலைவில், குடியாத்தம்-காட்பாடி நெடுஞ்சாலையில் திருமகள் கார்டன் என்ற புதிய மனைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய வசதிகளுடன் குடியாத்தத்தில் முதன் முறையாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஸ்மார்ட் சிட்டியாக இது உருவாகியுள்ளது.

திருமகள் கார்டன் புதிய மனைப்பிரிவானது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் குடியாத்தம் நகருக்குள் பஸ் நிலையத்திற்கு அருகிலும் நீதிமன்றத்திற்கு எதிரிலும் மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது. அனைத்து மனைகளும் அனுமதி பெற்ற மனைகளாகும்.

மனைகளுக்கிடையே அகலமான தார்சாலைகள், சுற்றிலும் பாதுகாப்பான மதில் சுவர், சுற்றிலும் மரங்கள் அமைந்து நல்ல காற்றோட்டம், சுவையான குடிநீர் வசதிகளுடன், சாலைகளின் இருபுறமும் தரமான கான்கிரீட் வடிகால் வசதி,

இரண்டு பூங்காக்களில் சிறியவர், பெரியவர் என இருதரப்புக்கும் விளையாட்டு உபகரணங்களும், உடற்பயிற்சி கருவிகள், அனைத்து ரோடுகளிலும் தெருவிளக்கு, குடிநீர் வினியோக பைப் லைன் வசதிகள், 24 மணி நேர கண்காணிப்புக்காக அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

இந்த திருமகள் கார்டன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திருமகள் கார்டன் நுழைவு வாயிலை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், டாக்டர்கள் எம்.எஸ்.திருநாவுக்கரசு, டி.லட்சுமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானத்தை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.

பிரியா சவுந்தரராஜன், காயத்ரிஅரசு, கிருஷ்ணவேணி, நகரமன்ற உறுப்பினர் பி.மேகநாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

முதல் விற்பனை

முதல் விற்பனையை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகரமன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, ரோட்டரி கவர்னர் ஜே.கே.என்.பழனி, முன்னாள் ரோட்டரி கவர்னர் கே.ஜவரிலால்ஜெயின், பேரணாம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் சித்ராஜனார்த்தனன், குடியாத்தம் நகரமன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி வக்கீல் எஸ்.விஜயகுமார்,

ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.சக்திதாசன், நகரமன்ற உறுப்பினர்கள் ஆட்டோமோகன், ம.மனோஜ், நவீன்சங்கர், சுமதி மகாலிங்கம், ஜாவித்அகமது, ரேணுகாபாபு, இந்துமதிகோபால், தொழிலதிபர்கள் பி.என்.எஸ். திருநாவுக்கரசு, கே.கிரிதரன், ஏ.ஹபீஜுர்ரஹ்மான், எம்.எஸ்.நாகலிங்கம், அம்மன்ரகுராமன் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருமகள் கார்டன் பங்குதாரர்கள் எஸ்.ஆனந்தவடிவேல், வி.சதாசிவம், சி.எம்.கே.பாலு, எம்.டி.ஈஸ்வரன், கே.மாணிக்கம், கே.கைலாசபதி, வி.எஸ்.குமரேசன், பி.சந்திரசேகர், டி.அருள்செந்தூர், இ.எஸ்.எம்.ராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story