தண்ணீர் பந்தல் திறப்பு விழா


தண்ணீர் பந்தல் திறப்பு விழா
x

பரப்பாடியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பரப்பாடி காமராஜர் பஸ் நிறுத்தம் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக மோர், இளநீர் மற்றும் பழங்கள் வழங்கினார்.

விழாவில் நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின், மாவட்ட பிரதிநிதி லிங்கேசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேகர், பஞ்சாயத்து துணைத்தலைவர் ஏ.விஜி, தி.மு.க. கிளை செயலாளர்கள் ஜார்ஜ், வடிவேல், மனோகர், ஊர் பிரமுகர்கள் ஆபிரகாம், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story