இன்ப மாரியம்மன் வீதியுலா


இன்ப மாரியம்மன் வீதியுலா
x

இன்ப மாரியம்மன் கோவில் வீதியுலா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இன்ப மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அன்று இரவு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவு 10 மணியளவில் வாண வேடிக்கையுடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது கரகாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story