கூடலூரில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.58 லட்சத்து 72 ஆயிரம் ஊக்கத்தொகை


கூடலூரில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.58 லட்சத்து 72 ஆயிரம் ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 9 Jun 2023 12:30 AM IST (Updated: 9 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.58 லட்சத்து 72 ஆயிரம் ஊக்கத்தொகை

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் ஏப்ரல் 2022- பிப்ரவரி 2023 வரை 348 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.58 லட்சத்து 72 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவிடிப்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டுறவு சங்க தலைவர் அருள்நாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் தாமஸ் ஜான், உன்னி கிருஷ்ணன், வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை பால் உற்பத்தியாளர்களில் முதலிடம் பிடித்த கம்மாத்தி விவசாயி ஜான்சனுக்கு அதிகபட்ச தொகையாக ரூ.2 லட்சத்து 91 ஆயிரத்து 576- ஐ சங்கத் தலைவர் அருள்நாதன் காசோலை மூலம் வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மற்ற பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story