குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடக்கம்


குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடக்கம்
x
தினத்தந்தி 31 July 2023 3:15 AM IST (Updated: 31 July 2023 3:16 AM IST)
t-max-icont-min-icon

அதிகரட்டி அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடங்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே அதிகரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு உதவி தலைமை ஆசிரியர் பிரியா தலைமை தாங்கினார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் நுகர்வோர் மன்றத்தை தெடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரவ தொடங்கிய நுகர்வு கலாசாரம் இன்று நுகர்வு வெறியாக மக்களை அலைகழிக்கிறது. எனவே, இளைய சமுதாயத்தை காக்க பள்ளி, கல்லூரிகளில் நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் பென்சாயில் பெராக்சைடு, சர்க்கரை நோயை உண்டாக்கும் அலெக்சான் போன்ற ரசாயனம் கலந்த மைதா மாவினால் தயாரிக்கப்படும் புரோட்டா மற்றும் பேக்கரி பொருட்களை சாப்பிடக்கூடாது. இத்தகைய உணவு பொருட்களை குழந்தைகள் தவிர்க்க வேண்டும். மேலும் நுகர்வு கலாசாரம் கடன், வரதட்சணை, லஞ்சம் போன்ற சமூக தீமைகளை வளர்த்து மக்களின் நிம்மதியை பறித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து லஞ்சம் இல்லாத மாவட்டமாக மாற்றுவோம் என்று மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் ஆசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார்.


Next Story