வத்திராயிருப்பு பகுதிகளில் தொடர்மழை


வத்திராயிருப்பு பகுதிகளில் தொடர்மழை
x

வத்திராயிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தொடர்மழை

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை கான்சாபுரம், கூமாபட்டி, பிளவக்கல் அணை, மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்தது. அதேபோல நேற்று மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்தது.

விவசாய பணி

தொடர்மழையினால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மழை நெல், பருத்தி மற்றும் பாசிபயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நெல் நடவு செய்வதற்கு தயார் நிலையில் விவசாயிகள் இருப்பதால் தொடர் மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இ்வ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story