ஒரு மாதமாக குறையும் பாதிப்பு: தமிழகத்தில் 703 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 421 ஆண்கள், 282 பெண்கள் என மொத்தம் 703 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 132 பேர், கோவையில் 89 பேர், செங்கல்பட்டில் 51 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் 19 மாவட்டங்களில் பாதிப்பு 10-க்கும் கீழ் குறைவாக உள்ளது.
மேலும், 12 வயதுக்குட்பட்ட 57 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 96 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 406 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 7 ஆயிரத்து 145 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.