பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த சம்பவம் - கிராம நிர்வாக அலுவலர் மாற்றம்


பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த சம்பவம் - கிராம நிர்வாக அலுவலர் மாற்றம்
x

பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றம்புரிவோரை சில காலத்த்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பனை நியமித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story