மதுவிற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
மதுவிற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
பூதலூர், திருவையாறில் மதுவிற்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
15 மதுபாட்டில்கள் பறிமுதல்
பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் போலீசார் முத்து வீரக் கண்டியன்பட்டி கிராமத்தில் தீவிர மதுவிலக்கு சோதனை நடத்தினர். அப்போது கண்டியன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஜோயல் (வயது20) என்பவரது வீட்டில் 15 மதுபாட்டில்கள் வைத்திருந்ததும், அவர் மதுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோயலை கைது செய்து அவரிடம் இருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிறுவன் கைது
திருவையாறு பகுதியில் மதுவிற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 18 வயதை சேர்ந்த ஒரு சிறுவன் என்பதும், அவன் மதுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து நடுக்காே்வரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து அவனிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.