அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4½ லட்சம் வருவாய்


அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4½ லட்சம் வருவாய்
x

அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4½ லட்சம் வருவாய் கிடைத்தது.

திண்டுக்கல்

அய்யலூர் அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்திபெற்ற வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது. வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக உள்ள கருப்பணசாமியை வழிபாடு செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். மேலும் கருப்பணசாமிக்கு கிடா வெட்டியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இதனால் இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் வண்டி கருப்பணசாமி கோவிலில் இன்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் கற்பக வெண்ணிலா, கோவில் அறங்காவலர் ரங்கநாதன், அறநிலையத்துறை ஆய்வாளர் முத்துசாமி மற்றும் வடமதுரை போலீசார் முன்னிலையில், தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், உண்டியல் காணிக்கை மூலம் 4 லட்சத்து 58 ஆயிரத்து 908 ரூபாய் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story