ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.70¾ லட்சம் வருவாய்


ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.70¾ லட்சம் வருவாய்
x
தினத்தந்தி 20 July 2023 4:45 AM IST (Updated: 20 July 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.70¾ லட்சம் வருவாய் கிடைத்தது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

கோவை மாவட்டம் ஆனைமலையில் உப்பாற்றங்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பிறமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பணியில் பக்தர்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் தட்டு காணிக்கை உண்டியல் ரூ.20 லட்சத்து 63 ஆயிரத்து 412 மற்றும் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.50 லட்சத்து 24 ஆயித்து 167 என மொத்தம் ரூ.70 லட்சத்து 87 ஆயிரத்து 579-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 189 கிராமும், வெள்ளி 645 கிராமும் இருந்தது.

உண்டியல் எண்ணும் பணியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளா தேவி, தங்கமணி, மருதமுத்து மற்றும் உதவி ஆணையர் ரா.விஜயலட்சுமி, பேரூர் பட்டீஸ்வர சுவாமி உதவி ஆணையர் விமலா, கோவில் கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, ஆய்வாளர் பா. சித்ரா, பாதுகாப்பு அதிகாரி முத்துராமன் மற்றும் பக்தர்கள், தன்னார்வலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story