வருமானவரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை


வருமானவரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
x

வருமானவரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுவிக்க வேண்டும்

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத்தர வேண்டுமென தமிழக அரசு நினைக்கவில்லை. தண்ணீரை கொடுக்கக் கூடாது என்பது கர்நாடக அரசியல். அதனை பெற வேண்டும் என்பது தமிழக அரசியல்.

தேர்தல் நெருங்கும் போதுதான் இஸ்லாமியர்கள் மீதான பாசம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் உடல் அளவில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிக்க வேண்டும்.

பா.ஜ.க. அரசியல் இஸ்லாமியர்களுக்கு எதிரானது. மற்ற நாடுகள் ெரயில்வே துறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ள நிலையில், இந்தியாவில் எதிரே வரும் ெரயிலைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மோசமான நிலை உள்ளது. அந்த அளவிற்கு ஊழியர்களும் மெத்தனமாக செயல்படுகிறார்கள்.

பழிவாங்கும் நடவடிக்கை

அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற சுதந்திரமான அமைப்புகள் தற்போது அரசியல் தலைவர்களின் கைவிரல்களாக மாறியுள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனைகள் நடைபெறுகிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். கடந்த மாதம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்து, தற்போது வட மாவட்டத்தில் தொடங்கி உள்ளேன். அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்க இருக்கிறோம். அதன்பிறகு வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story