தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொது விநியோகத் திட்டத்திற்கு உணவுப்பொருட்களை அதிக அளவு உணவுப்பொருட்கள் சப்ளை செய்து வரும் அருணாச்சலம் இம்பேக்ஸ் என்ற நிறுவனத்தின் மண்ணடி அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
காமாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ், இண்டர்கிரேடட் சர்வீஸ் குரூப் ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ் உள்ளிட்ட பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story