புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!


புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!
x

புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வந்தார். மாணிக்கம் மரணமடைந்தையடுத்து அவரது மகன் பாண்டித்துரைக்கு கருணை அடிப்பைடையில் அரசு ஒப்பந்ததாரர் பணி வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பணிகளை மேற்கொண்டு வந்தார். தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சி காலத்தில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி மேலாக பணிகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரைக்கு சொந்தமான இடங்களில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் பாண்டித்துரை அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் முடிவிலே ஏதும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா? என்பது தெரியவரும்

நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராக பாண்டித்துறை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story