மக்கள் அளித்த ஆட்சி அதிகாரத்தைத் மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது : மு.க.ஸ்டாலின் கண்டனம்


மக்கள் அளித்த ஆட்சி அதிகாரத்தைத் மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது : மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 14 Feb 2023 8:23 PM IST (Updated: 14 Feb 2023 8:41 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் அளித்த ஆட்சி அதிகாரத்தைத் மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

வெளிப்படத்தன்மையுடனும் சுதந்திரத்துடன் செயல்படும் அமைப்புகள் எந்த ஒரு துடிப்பான ஜனநாயகத்திற்கும் தவிர்க்க முடியாதது ஆகும். தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசின் கீழ் நாட்டின் மாட்சிமை மிக்க ஒரு தலைபட்சமானதாகவும் சுதந்திரத்தையும் முற்றிலும் இழந்து விட்டன. அரசியல் எதிரிகளை குறிவைத்து தாக்கும் கருவியாக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்தூறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிக்ளாக பயன்படுத்தப்படுகின்றன. பி.பி.சி. நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி "சர்வே"-யும் இந்த பட்டியலில் சமீபமாக இணைந்துள்ளது.

மக்கள் அளித்த ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருவதற்குக் காரணமானவர்கள், நடப்பவை அனைத்தையும் மக்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும், எதிர்வரும் தேர்தல்களில் இதற்கான தக்க பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story