வடசித்தூர் நால்ரோட்டில் விபத்துகள் அதிகரிப்பு


வடசித்தூர் நால்ரோட்டில் விபத்துகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடசித்தூர் நால்ரோட்டில் விபத்துகள் அதிகரிப்பு

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே வடசித்தூரில் நால்ேராடு சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் தினமும் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும். ஆனால் சாலை குறுகலாக உள்ளது. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது.

இந்த நிலையில் வடசித்தூர் நால்ரோடு பகுதியில், நான்கு புறங்களில் இருந்து வரும் வாகனங்களும் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. அவை ஒன்றையொன்று கடந்து செல்லும்போது, போதிய இடவசதி இன்றி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் நடந்து செல்பவர்களும் பீதி அடைகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, விபத்துகளை தடுக்க வடசித்தூர் மேற்கில் உள்ள அரசு பள்ளியில் இருந்து கிழக்கில் உள்ள கால்நடை மருந்தகம் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும். மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். வாரச்சந்தை அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வாகனங்களை நிறுத்தலாம் என்றனர்.


Next Story