வணிக நிறுவனங்களுக்கான வங்கி கடன் அதிகரிப்பு


வணிக நிறுவனங்களுக்கான வங்கி கடன் அதிகரிப்பு
x

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வணிக நிறுவனங்களுக்கான வங்கி கடன்கள் அதிகரித்து விட்டதாக பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.

விருதுநகர்


நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வணிக நிறுவனங்களுக்கான வங்கி கடன்கள் அதிகரித்து விட்டதாக பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.

கடன் தொகை

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

நடப்பு நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களில் வங்கிகள் ரூ.7.2 லட்சம் கோடி அளவிற்கு கடன் தொகையை விரிவுபடுத்தியுள்ள நிலையில் கடன் தொகை ரூ.143.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இதில் ரூ.18 லட்சம் கோடி அதாவது 24.50 சதவீதம் தனி நபர் கடன்களாக வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடனாக ரூ. 63 ஆயிரத்து 530 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகரித்துள்ள வங்கி கடனில் 8.9சதவீதம் ஆகும். ஜூன் முடிய உள்ள காலாண்டில் தொழில்துறைக்கு ரூ. 87 ஆயிரத்து 392 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. புதிய கடன்கள் 12.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

3 மடங்கு அதிகம்

தொழில் துறை அதிக திறன் பயன்பாடு காரணமாக பெரிய தொழில் நிறுவனங்களின் புதிய முதலீடுகள் தாமதம் ஆகின்றன. இருப்பினும் அதிக பண வீக்கம் தேவையை குறைக்கலாம் என்று வணிகர்கள் எச்சரிக்கையாக செயல்படும் நிலையின் காரணமாக உள்கட்டமைப்பு தொடர்ந்து தொழில்துறை கடனுக்கான காரணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேவை துறையின் வங்கிக்கடன் ரூ. 2.8 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டைவிட சேவை துறையில் முதல் காலாண்டில் கடன் தொகை 38.6 சதவீதம் உயர்ந்துள்ளது. சேவைகளில் விமான போக்குவரத்து மிக விரைவான வளர்ச்சியை வெளிப்படுத்தியது. இத்துறைக்கு கடன் ரூ. 13,703 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டதை விட ரூ. 4,350 கோடி வளர்ச்சியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story