சாலைகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு


சாலைகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாலைகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வால்பாறை பகுதியில் பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் சாலைகளில் கூட்டம், கூட்டமாக காட்டெருமைகள் நடமாடி வருகின்றன. அவை மழை முடிந்து வெயில் அடிக்கும் சூழலில் சாலையோரத்தில் துளிர்விட்டுள்ள புற்களை மேய்வதற்கு குட்டிகளுடன் நடமாடி வருகிறது. இதனால் இரவு நேரத்தில் வால்பாறை பகுதிக்கு வந்து விட்டு எஸ்டேட் பகுதிக்கு செல்பவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வெளியிடங்களில் இருந்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், பஸ்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு நடந்து செல்பவர்கள், தேயிலை தொழிற்சாலைகளுக்கு இரவு பணிக்கு செல்பவர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். இரவில் தனியாக நடந்து செல்ல வேண்டாம். காட்டெருமைகள் நிற்பதை பார்த்தால் அருகில் வாகனங்களை கொண்டு செல்வது, ஒலி எழுப்புவது, புகைப்படங்கள் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றனர்.


Next Story