தேங்காய் சிரட்டை விலை உயர்வு


தேங்காய் சிரட்டை விலை உயர்வு
x

தேங்காய் சிரட்டை விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர், புன்னம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் பறித்து தேங்காய் பருப்பு எடுத்த பின் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய தேங்காய் சிரட்டைகளை கரி தயார் செய்பவர்களுக்கும், பவுடர் தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.8-க்கு விற்பனையானது. இந்த வாரம் ரூ.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

1 More update

Next Story