மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சேலம்

மேட்டூர்

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரம் கன அடி வீதமும், அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதமும் கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.


Next Story