வெயிலின் தாக்கம் அதிகரிப்பு:தர்ப்பூசணி பழ விற்பனை அமோகம்


வெயிலின் தாக்கம் அதிகரிப்பு:தர்ப்பூசணி பழ விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 31 March 2023 6:45 PM GMT (Updated: 31 March 2023 6:45 PM GMT)

வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் தர்ப்பூசணி பழ விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

தேனி

கம்பம் பகுதியில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தர்ப்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி பழங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

இதனால் கம்பம் பகுதி விவசாயிகள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் இருந்து தர்ப்பூசணி பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் வரை 1 கிலோ ரூ.15 வரை விற்பனையாகி வந்த தர்ப்பூசணி பழம் தற்போது கிலோ ரூ.20-க்கு விற்பனையாகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தர்ப்பூசணி பழம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வெயில் வாட்டி எடுப்பதால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு தர்ப்பூசணி பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் தர்ப்பூசணி பழங்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது என்றனர்.


Related Tags :
Next Story