சிவகாசியில் லாட்டரி விற்பனை அதிகரிப்பு
சிவகாசி பகுதியில் உள்ள கூலி தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை ஆகும் லாட்டரி சீட்டுக்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி பகுதியில் உள்ள கூலி தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை ஆகும் லாட்டரி சீட்டுக்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லாட்டரி விற்பனை
சிவகாசியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்களை குறி வைத்து வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் போலி லாட்டரிகளையும் கொடுத்து அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கிடையில் சிவகாசி டவுன் போலீசார் சித்துராஜபுரம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த பரசுராமன் (வயது 62) என்பவரை கைது செய்தனர்.
கடும் நடவடிக்கை
பின்னர் அவரிடம் இருந்து ரூ.4,250 மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள், லாட்டரி விற்றதன் மூலம் கிடைத்த ரூ.890 மற்றும் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கை தொடர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கூலி தொழிலாளர்களை குறி வைத்து லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.