பொள்ளாச்சி சந்தைக்கு மாங்காய் வரத்து அதிகரிப்பு
மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் பொள்ளாச்சி சந்தைக்கு மாங்காய் வரத்து அதிரித்துள்ளது. ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி
மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் பொள்ளாச்சி சந்தைக்கு மாங்காய் வரத்து அதிரித்துள்ளது. ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி சந்தை
ஏப்ரல், மே மாதத்தில் இருந்து மாம்பழம் சீசன் தொடங்கும். இந்த மாம்பழ சீசனை முன்னிட்டு பொள்ளாச்சி சந்தையில் மாங்காய், மாம்பழ வரத்து அதிகரித்து விற்பனைக்கு வைக்கப்படும். கேரளா, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாங்காய், மாம்பழம் கொண்டுவரப்படும்.
இந்த நிலையில் தற்போது மாம்பழம் சீசன் தொடங்க உள்ளதால்
பொள்ளாச்சி சந்தைக்கு கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் இருந்து மாங்காய்கள் வரத்து அதிகரித்துள்ளன.
குறிப்பாக சந்தைக்கு செந்தூரம், பங்கனபள்ளி, கிளி மூக்கு ஆகிய மாங்காய்கள் வரத்து உள்ளன. அதன்படி தற்போது பொள்ளாச்சி சந்தைக்கு ஒரு நாளைக்கு 10 டன் மாங்காய் வரை விற்பனைக்கு வருகிறது. இவை அனைத்து உள்ளூர் பகுதிகளில் விற்பனையாகி வருகிறது. நல்ல விலையும் கிடைத்து வருகிறது.
கிலோ ரூ.50 வரை
இதுகுறித்து பொள்ளாச்சி மாங்காய் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது பொள்ளாச்சி சந்தைக்கு மாங்காய்கள் கேரளா பகுதியில் இருந்து வர தொடங்கியுள்ளது. செந்தூரம், பங்கனபள்ளி, கிளி மூக்கு ஆகிய வகை மாங்காய்கள் விற்பனைக்கு வருகின்றன. இவை ஒரு கிலோ 30 முதல் 50 ரூபாய் வரைக்கும் விற்பனை ஆகிறது. தமிழகத்தில் மாங்காய் சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்கும். அப்போது மாங்காய் வரத்து அதிகரிக்கும் சூழ்நிலையில் இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாங்காய் விலை சீராக உள்ளது என்றார்.