முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் அதிகரிப்பு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000-ஆக, கலைஞர் நூற்றாண்டையொட்டி ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் மருத்துவ படி 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.குடும்ப ஓய்வூதியம் 12,500-ல் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்" என முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story