காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு


காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் நள்ளிரவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறையில் நள்ளிரவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

காட்டு யானைகள்

வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பகலில் தேயிலை தோட்ட பகுதியில் யானைகள் முகாமிட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக நள்ளிரவில் வனப்பகுதியில் வெளியேறும் காட்டு யானைகள் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளுக்குள் முகாமிட்டு வருகிறது. வீடுகள், உடமைகளை சேதப்படுத்தி வருகின்றன.

மேலும் யானைகள் ரேஷன் கடையை உடைத்து அரிசியை தின்று வருகிறது. பகல் நேரத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ள இடங்களில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நள்ளிரவில் அவர்கள் ஓய்வு எடுக்க செல்லும் சமயத்தில், காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகிறது.

கண்காணிக்க வேண்டும்

இதனால் வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வரும் பணியாளர்களை காலையில் இருந்து மாலை 6 மணி வரை ஒரு குழுவும், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை ஒரு குழுவும், இரவு 10 மணியில் இருந்து அதிகாலை வரை ஒரு குழுவினரையும் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தி யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்று எஸ்டேட் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தற்போது காலை முதல் மறுநாள் அதிகாலை வரை தொடர்ந்து வன பணியாளர்களை பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களால் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல முடிவதில்லை. அதற்குள் யானைகள் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, வனத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, வன பணியாளர்களின் பணி நேரத்தை பிரித்து சுழற்சி முறையில் பணிக்கு அனுப்பினால் யானைகளால் ஏற்படும் சேதங்களை கட்டுப்படுத்த முடியும் என்று எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story