கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு


கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு
x

கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படுகின்றது. நேற்று மாலை மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 400 கன அடியாக இருந்தது. திருச்சி மாவட்டம் மேல் அணையில் இருந்து கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 8,533 கன அடியும், காவிரியில் 55,019 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கல்லணையில் அதிக அளவில் கொள்ளிடத்தில் 41985கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கொள்ளிடத்தில் மேலணை மற்றும் கல்லணையில் திறக்கப்படும் தண்ணீரையும் சேர்ந்து 1.50 லட்சம் கன அடி தண்ணீர் சென்று கொண்டுள்ளது. கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 3009 கன அடி, வெண்ணாற்றில் 3010 கன அடி, கல்லணை கால்வாயில் 2012 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. .கல்லணை காவிரி ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் பாலத்தின் அருகில் காவிரி ஆற்றில் ஏராளமான‌ நீர் வாத்துகள் கூட்டமாக காணப்பட்டது. நேற்று பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் அவ்வப்போது தூறல் மழை பெய்தது.


Next Story