தென்மேற்கு பருவமழை காரணமாகஆனைமலையில் நெல் சாகுபடி அதிகரிப்பு-விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்


தென்மேற்கு பருவமழை காரணமாகஆனைமலையில் நெல் சாகுபடி அதிகரிப்பு-விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
x

தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலையில் நெல் சாகுபடி அதிகரித்து உள்ளது. மேலும் விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலையில் நெல் சாகுபடி அதிகரித்து உள்ளது. மேலும் விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நெல் சாகுபடி அதிகரிப்பு

ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மற்றும் நெல் சாகுபடி விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்தப்பகுதிகளில் ஆண்டுக்கு 2 போகத்தில் நெல்லை விவசாயிகள் பயிரிடுகின்றனர். ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும், பழைய ஆயக்கட்டு பாசத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் நெல் விவசாயம் ஓரளவுக்கு இருந்தது. தற்போது பெய்த தென்மேற்கு பருவ மழையால் அணைகள், குளம் மற்றும் குட்டைகள், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி அதிகரித்து உள்ளது. இருப்பினும் ஒருசில விவசாயிகள் நெல் சாகுபடியை தவிர்த்து மாற்று பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.

விழிப்புணர்வு

இதனால் கடந்த 2015-ம் ஆண்டு 1100 ஹெக்டர் இருந்த வயல்வெளிகள் தற்போது 550 ஹெக்டர் மட்டுமே இருக்கிறது. மேலும், விவசாயிகள் தென்னை, இஞ்சி போன்ற மாற்று விவசாயத்திற்கு அதிகளவு மாறுகின்றனர். இதனை தடுக்க அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு வேளாண்மை துறையினரால் வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஆனைமலை பகுதியில் தற்போது நெல் விவசாயம் மற்றும் பந்தல் விவசாயம் போன்றவை படிப்படியாக குறைந்து வருகிறது.

ஆட்கள் பற்றாக்குறை

ஆண்டுதோறும் ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய நிலம் குறைந்து வந்தால் உணவு தட்டுப்பாடு ஏற்படும். மேலும் அதனைச் சார்ந்த சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால் விவசாயம் செய்வதற்கு தற்போது உள்ள இளைஞர்கள் விவசாயம் பற்றி அறிந்து அவர்களாகவே முன்வர வேண்டும். இதற்கு தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி நெல் சாகுபடியை மேலும் அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story