லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு


லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2022 12:30 AM IST (Updated: 16 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 141.40 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,106 கனஅடியாக இருந்தது.

99 மெகாவாட் உற்பத்தி

அணையில் இருந்து வினாடிக்கு 1,109 கனஅடி கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று காலை முதல் 3 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டது. 2-வது ஜெனரேட்டரில் 34 மெகாவாட், 3-வது ஜெனரேட்டரில் 35 மெகாவாட், 4-வது ஜெனரேட்டரில் 30 மெகாவாட் என மொத்தம் 3 ெஜனரேட்டரில் இருந்து மொத்தம் 99 மெகாவாட் மின்உற்பத்தி அதிகரிக்கப் பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 511 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் 2-வது ஜெனரேட்டரில் 46 மெகாவாட் மட்டும் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story