வெல்லம் விலை உயர்வு


வெல்லம் விலை உயர்வு
x

வெல்லம் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். பின்னர் கரும்புகள் விளைந்தவுடன் வெட்டி வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,260-க்கும், அச்சுவெல்லம் ரூ.1170-க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,235-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,210-க்கும் விற்பனையானது.


Next Story