வெல்லம் விலை உயர்வு


வெல்லம் விலை உயர்வு
x

வெல்லம் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், கவுண்டன்புதூர், முத்தனூர், குளத்துப்பாளையம், நடையனூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துவருகின்றனர். இவற்றை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கிச் சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,200-க்கும், அச்சுவெல்லம், ரூ.1,300-க்கும், இந்த வாரம் உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,300-க்கும், அச்சு வெல்லம், ஒரு சிப்பம் ரூ.1,450-க்கும் விற்பனையானது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story