மேட்டூா் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


மேட்டூா் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் கை கொடுக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வினாடிக்கு 200 கனஅடிக்கு கீழ் சென்றது. இந்த நிலையில் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வர தொடங்கி விட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்னும் சில நாட்களில் உயர தொடங்கி விடும். எனவே நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story