விதிமுறைகளை பின்பற்றாததால் சாலை விபத்துகள் அதிகரிப்பு


விதிமுறைகளை பின்பற்றாததால் சாலை விபத்துகள் அதிகரிப்பு
x

விதிமுறைகளை பின்பற்றாததால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பகுதியில் கடந்த சில வாரங்களாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சிவகாசியில் போலீசார் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள், நிர்வாகிகள், டிரைவர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சிவகாசியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அளவுக்கு அதிகமாக பயணம் செய்யும் பயணிகளில் சிலர் கீழே விழுந்து காயம் அடையும் சம்பவம் நடந்து வருகிறது. ஒரு சில நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் செல்கிறது. இதனால் பயணிகள் பாதிக்கிறார்கள். தனியார் பஸ்கள் உரிய விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை சிலர் சரியான முறையில் கடைபிடிக்காததால் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தனியார் பஸ் நிர்வாகிகள் சிலர் பஸ் பயணத்தின் போது டிரைவர் மற்றும் கண்டக்டர்களை, மாணவர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தினர்.



Next Story