கொங்கணாபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு


கொங்கணாபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2022 1:15 AM IST (Updated: 23 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கொங்கணாபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.

சேலம்

எடப்பாடி:-

எடப்பாடிைய அடுத்த கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. நாளை (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், கால்நடைகளின் விற்பனை அதிகரித்து இருந்தது. இதனால் ஆடு மற்றும் கோழிகளின் விலை வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருந்தது. சுமார் 9 முதல் 10 கிலோ வரையுள்ள ஆடுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 800 வரையிலும், சுமார் 3 கிலோ எடையுள்ள நாட்டுக்கோழி ரூ.1,100 முதல் ரூ.1,550 வரையிலும் விற்பனையானது.


Next Story