திருப்புல்லாணி, ஆனைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு


திருப்புல்லாணி, ஆனைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
x

திருப்புல்லாணி, ஆனைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாயல்குடி அருகே வாலிநோக்கம், ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, ஆனைகுடி, தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் மற்றும் திருப்பாலைக்குடி, உப்பூர் பத்தனேந்தல், சம்பை உள்ளிட்ட மாவட்டத்தில் பல ஊர்களிலும் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் அளவிற்கு கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வருகிறது.

வெயிலின் தாக்கத்தால் மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலை ஒரு புறம் இருக்க உப்பு விளைச்சல் அதிகரித்து உள்ளதாகவே கூறப்படுகிறது. உப்பு உற்பத்திக்கு முக்கியமான தேவை வெயிலின் தாக்கம் தான். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, ஆனைகுடி உப்பள பாத்திகளில் கல் உப்பின் உற்பத்தி மிக அதிகமாகவே உள்ளது. பாத்திகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உப்புகள் மலை போல் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. உப்பு உற்பத்தி அதிகமாகி உள்ளதால் அதன் விலை குறைந்துள்ளதால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒரு டன் ரூ.2,500 வரை விலை போன நிலையில் தற்போது ரூ.1800-க்கு மட்டுமே விலை போவதாக கூறப்படுகிறது.


Next Story