உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பு: சின்ன வெங்காயம் கிலோ ரூ.84-க்கு விற்பனை


உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பு: சின்ன வெங்காயம் கிலோ ரூ.84-க்கு விற்பனை
x

உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பதால் சின்ன வெங்காயம் கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சேலம்

சின்ன வெங்காயம்

சேலம் மாநகரில் சூரமங்கலம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாகவே தக்காளி, சின்ன வெங்காயம், கேரட், பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.100-யை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் உழவர் சந்தைகளுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் கடந்த வாரம் கிலோ ரூ.130 வரை விற்பனையான சின்னவெங்காயம் நேற்று ரூ.70 முதல் ரூ.84 வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி

இதேபோல் நேற்று தக்காளி கிலோ ரூ.100-க்கும், உருளைக்கிழங்கு ரூ.34-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், பீன்ஸ் ரூ.105-க்கும், கத்தரிக்காய் ரூ.36-க்கும், கேரட் ரூ.65-க்கும், பச்சை மிளகாய் ரூ.70-க்கும், பாகற்காய் ரூ.60-க்கும், சுரைக்காய் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறும் போது, உழவர் சந்தைகளுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளது. ஒரு உழவர் சந்தைக்கு சுமார் 2 டன் வரை சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இதனால் அதன் விலை குறைய தொடங்கி உள்ளது. மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.


Next Story