சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
x

சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதியில் செண்பகத்தோப்பு என அழைக்கப்படும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் மான், புலி, சிறுத்தை, காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இருப்பினும் உலகிலேயே அரிதாக காணப்படும் சாம்பல் நிற அணில்கள் இங்கு அதிகமாக வசிக்கின்றன. இந்த அணில்கள் குட்டி போட்டு பால் கொடுக்கும் இனத்தை சேர்ந்தது. இந்த அரிதான அணில்கள் பாதுகாக்க சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் என மாற்றப்பட்டுள்ளது. இந்த அணில்கள் வாழ்வதற்கு அதிகமான தட்பவெட்ப நிலை மற்றும் உணவுகள் இருப்பதால் வேட்டையாடுவது முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது.

ஆதலால் தற்போது சாம்பல் நிற அணில்களின் இனப்பெருக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் அணில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.


Related Tags :
Next Story