கறிக்கோழி இறைச்சி விலை உயர்வு


கறிக்கோழி இறைச்சி விலை உயர்வு
x
தினத்தந்தி 20 Aug 2023 2:15 AM IST (Updated: 20 Aug 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கறிக்கோழி இறைச்சி விலை உயர்ந்து உள்ளதால் அசைவ பிரியர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கறிக்கோழி இறைச்சி விலை உயர்ந்து உள்ளதால் அசைவ பிரியர்கள் கவலை அடைந்து உள்ளனர்.


கறிக்கோழி இறைச்சி


தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலை, பொள் ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. அந்த பண் ணைகளில் இருந்து தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது.


அவை தமிழகம், ஆந்திரா, கேரளம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படு கிறது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.


விலை உயர்வு


ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது. இந்த நிலையில், கடந்த 8-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.101 (உயிருடன்), 10-ந் தேதி ரூ.105, 11-ந் தேதி ரூ.107, 12-ந் தேதி ரூ.112, 17-ந்தேதி ரூ.117, 18-ந் தேதி ரூ.123 என கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


கறிக்கோழி கொள்முதல் விலை 12 நாட்களில் கிலோவிற்கு ரூ.22 உயர்ந்து உள்ளது. இதனால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


நுகர்வு அதிகரிக்கும்


தற்போது, கறிக்கோழி இறைச்சிக் கடைகளில் ஒரு கிலோ கறிக் கோழி இறைச்சி ரூ.220 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்படு கிறது. ஒரு சில இடங்களில்இந்த விலை மாறுபடும். ஆடி மாதத் தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். அப்போது பலர் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.


ஆவணி மாதம் நேற்று முன்தினம் பிறந்து உள்ளது. இந்த மாதத்தில் கறிக்கோழி நுகர்வு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பண்ணைக்கொள்முதல் விலை மற்றும் இறைச்சிக் கடைகளில் கறிக்கோழி இறைச்சி விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் அசைவ பிரியர்கள் கவலை அடைந்து உள்ள னர்.

கடந்த 10 நாட்களில் கறிக்கோழி இறைச்சி விலை கிலோ விற்கு சுமார் ரூ.40முதல் ரூ.50 வரை உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story