வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு..!
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியது.
சென்னை,
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்ததால் 10 ரூபாய் அதிகம் வாங்கும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு இப்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story