வாரச்சந்தையில் காய்கறி விலை உயர்வு
பெரியநாயக்கன்பாளையம் வாரச்சந்தையில் காய்கறி விலை உயர்ந்தது.
பெரியநாயக்கன்பாளையம்
பெரியநாயக்கன்பாளையம் வாரச்சந்தையில் காய்கறி விலை உயர்ந்தது.
வாரச்சந்தை
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் வாரச்சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் சின்னவெங்காயம், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து உள்ளது.
அதாவது ரூ.35-க்கு விற்ற ஒரு கிலோ சின்னவெங்காயம் நேற்று ரூ.72-க்கும் ரூ.45-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.64-க்கும் ரூ.48-க்கு விற்ற பச்சைமிளகாய் ரூ. 66-க்கும் விற்றது. வரத்து குறைவு மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் காய்கறி விலை சற்று அதிகரித்து உள்ளது.
காய்கறி விலை
இது போல் மற்ற காய்கறிகளின் விலை (கிலோவில்) விவரம் வருமாறு:-
பெரியவெங்காயம் -ரூ.34, அவரைக்காய்-ரூ.56, பீன்ஸ்-ரூ.66, பீர்க்கங்காய்- ரூ.55, காலிப்பிளவர், புடலங்காய், சுரைக்காய் தலா ரூ.38, கத்திரிக்காய், கேரட் தலா ரூ.46, கொத்தவரை,
பாகற்காய்-ரூ.48 உருளைக்கிழங்கு-ரூ.44 மேரக்காய், ஆப்பிள் தக்காளி, நாட்டுத்தக்காளி தலா ரூ.24, அரசாணிக்காய், பூசணிக்காய் முள்ளங்கி, முட்டைக்கோஸ் தலா ரூ.20-ல் இருந்து ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது.
தேங்காய்கள் மிகச்சிறியது ரூ.13, சிறியது ரூ.16, நடுத்தரம்-ரூ.20, பெரியது-ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது.