கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் மூலம் கரும்பு ஏற்றுமதி


கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் மூலம் கரும்பு ஏற்றுமதி
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் மூலம் கரும்பு அனுப்பி வைக்கப்பட்டது.

கோயம்புத்தூர்


பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் மூலம் கரும்பு அனுப்பி வைக்கப்பட்டது.

விமானங்கள் இயக்கம்

கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர சென்னை, கொல்கத்தா, பெங்களூரூ, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.

தமிழர் பண்டிகையான பொங்கல் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஷார்ஜா மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பண்டிகையை கொண்டாட வசதியாக கோவையில் இருந்து விமானத்தில் நேற்று 600 கிலோ கரும்பு அனுப்பி வைக்கப்பட்டது.

3 டன் சரக்குகள்

இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு லாரியில் கரும்பு கொண்டு வரப்படுகிறது.

அங்கிருந்து ஷார்ஜா விமானத்தில் கரும்புகளை கொண்டு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது. அதன்படி நேற்று காலை 7 மணிக்கு கோவையில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தில் 1 டன் கரும்பு கொண்டு செல்ல பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் 1 டன் கரும்பு வைக்க அதிக இடம் தேவைப்பட்டது. இதனால் மற்ற சரக்குகள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற் பட்டது. எனவே 600 கிலோ கரும்புகளை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மீதம் உள்ள கரும்புகள் அடுத்த விமானத்தில் ஷார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story