பிரகதீஸ்வரர் கோவிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


பிரகதீஸ்வரர் கோவிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x

கோடை விடுமுறையையொட்டி பிரகதீஸ்வரர் கோவிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு உலக பிரசித்தி பெற்ற கோவிலாக பிரகதீஸ்வரர் கோவில் திகழ்கிறது. சிறப்பு வாய்ந்த இந்த கோவில் கலை நயத்துடனும், மிக பிரமாண்டமாக கட்டப்பட்டது. போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் தற்கால பொறியியல் வல்லுனர்களுக்கு சவால் விடும் வகையில், சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியந்து பார்த்து செல்கின்றனர். கோவிலில் சிங்கமுக கிணறு, ஒரே கல்லில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் சுற்றளவு 60 அடி, உயரம் 1½ அடி ஆகும். இந்த சிவலிங்கம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்ற சிறப்பும் உண்டு. இந்த கோவிலில் நவக்கிரக பீடம், ஒரே கல்லில் அமைந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் தற்போது இந்த கோவிலின் கலைநயத்தை காண தினமும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பார்த்து வியந்து சென்றனர்.


Next Story