கேசர்குளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


கேசர்குளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

தொடர் மழையால் கேசர்குளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கேசா்குளி அணை உள்ளது. 25 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் பெல்ரம்பட்டி, கரகூர், சீரியம்பட்டி, கோட்டூர், ஈச்சம்பள்ளம், காடையம்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தேன்கனிக்கோட்டை, பெட்டமுகிலாளம், கோட்டூர்மலை, மொரப்பூர் ஆகிய காப்புக்காடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கனஅடியாக உள்ளது. அணையில் 18 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story